News January 19, 2025

பெண் டாக்டர் கொலை…மகனை தூக்கிலிட சொல்லும் தாய்

image

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது. இதுபற்றி சஞ்சய் ராயின் தாய் மாலதி(70) கூறுகையில், எனக்கும் 3 மகள்கள் இருக்கின்றனர். அந்த டாக்டரின் தாயின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். குற்றவாளியான என் மகனை மன்னிக்கவே மாட்டேன், அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஆட்சேபிக்க மாட்டேன் என்றார்.

Similar News

News March 28, 2026

ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது: EPS

image

மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் தான் பேசியதை பார்த்து ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக EPS கூறியுள்ளார். இதனால்தான் தனக்கு பதிலடி தருவதாக நினைத்து 3 அமைச்சர்கள் ஏதேதோ பேசியிருக்கிறார்கள் என்ற அவர், ஆனால் அவர்களால் தான் சொன்ன கருத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றார். நிச்சயமாக NDA கூட்டணி வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்? தகவல் கசிந்தது

image

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் வைரலாகவே, ரசிகர்கள் SM-களின் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். முன்னதாக, ஆண்ட்ரியா, ஜோனிடா காந்தி ஆகியோருடன் அனிருத் கிசுகிசுக்கப்பட்டாலும், காவ்யா மாறன் உடன் திருமணம் என்பது வரை பேச்சு அடிபட்டது. இந்த தகவல்களுக்கு அனிருத் மறுப்பும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2026

வரலாறு காணாத அளவு விலை குறைந்தது

image

தக்காளி விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, மதுரை சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹5-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ₹8 – ₹10-க்கு தக்காளி விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேஸ் தட்டுப்பாடால் பல ஹோட்டல்கள் குறைந்த அளவு காய்கறிகள் வாங்குவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!