News October 5, 2024

27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற மும்பை

image

27 ஆண்டுகளுக்குப் பின் இரானி கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. Rest Of India அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தபோதிலும், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ROI முதல் இன்னிங்சில் 416 ரன்களும், MUM அணி இரு இன்னிங்சிலும் முறையே 537 & 329/8 ரன்களும் எடுத்து. இது மும்பை அணி வெல்லும் 15வது இரானி கோப்பையாகும்.

Similar News

News August 13, 2025

ஃபோனில் நிலநடுக்க அலர்ட் வரணுமா? இத ON பண்ணுங்க..

image

நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை உங்கள் ஃபோனில் பெற இந்த Setting-ஐ ON செய்தால் போதும்..
▶உங்கள் போன் Android 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருக்க வேண்டும்.
▶இண்டர்நெட், லொகேஷனை ON செய்யுங்கள்
▶போனில் உள்ள ‘Settings’க்கு செல்லுங்கள்.
▶அங்கு ‘Safety & Emergency’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். ▶பிறகு ‘Earthquake Alerts’ ஆப்ஷனை தேடி அதனை ON செய்து வைத்துக்கொள்ளவும்.

News August 13, 2025

இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

image

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

News August 13, 2025

பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

image

பயிற்சிக்கு சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கெபிராஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!