News April 4, 2025

இன்று மும்பை vs லக்னோ.. யார் கை ஓங்கும்?

image

லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 16ஆவது லீக் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 6ஆவது இடத்திலும், லக்னோ அணி 7ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே தீவிரமாக போராடும் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

Similar News

News April 8, 2025

சித்திரை திருவிழாவுக்கு ரெடியா?

image

மதுரையில் வெகு பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மே 8-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சமான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், தமிழகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் கூடி நின்று அழகரை வழிபடுவர்.

News April 8, 2025

EV வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

image

EV வாகனங்களை எளிதில் சார்ஜிங் செய்ய ஏதுவாக, தமிழகம் முழுவதும் பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் 100, மற்ற பகுதிகளில் தலா 5 முதல் 10 வரை சார்ஜிங் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போதிய இடம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

டிரம்ப்புடன் தான் கூட்டணி: சீமான்

image

டிரம்ப்புடன் கூட்டணி வைக்கப் போவதாக சீமான் சிரித்தவாறு தெரிவித்துள்ளார். திருச்சி கோர்ட்டில் ஆஜராக வந்த போது பேட்டியளித்த அவர், அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்க வந்தவன் என்பதால், 2026 தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட உள்ளதாகவும், தமிழகத்தில் அதிக வழக்குகளை சந்தித்த ஒரே கட்சி தாங்கள் தான் எனவும் கூறியுள்ளார். மேலும், கோர்ட், ஜெயில் கட்டப்பட்டதே தங்களுக்காக தான் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!