News March 31, 2025
மும்பை அணி அபார வெற்றி…!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக பௌலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பையில், ரிக்கெல்டன்(62*) அதிரடியாக அரைசதம் விளாசினார். இதனால், அந்த அணி எளிதில் வெற்றிபெற்றது.
Similar News
News April 2, 2025
4 மாவட்டங்களுக்கு விடுமுறை

காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப்.5,6,7) என தொடர்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஏற்கெனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏப்.7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம் கொண்டுவந்தார் CM

கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News April 2, 2025
விண்வெளியில் ஆல்கஹால் மேகம்: சரக்குமழை பொழியுமா?

விண்வெளியில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அக்விலா விண்மீன் தொகுப்பில் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆல்கஹால் மேகம் இருக்கிறதாம். 400 குவிண்டிலியன் லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை கொண்டுள்ள இது, சூரிய மண்டலத்தை விட 1,000 மடங்கு பெரியது. பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 3 லட்சம் லிட்டர் குடித்தாலும் அதனை காலி செய்ய 1 பில்லியன் ஆண்டுகளாகும். பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் சரக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.