News April 1, 2025
மும்பை சர்ப்ரைஸ்… இன்னும் எத்தனையோ!

முதல் 2 ஆட்டங்களில் தோற்றாலும், 3-வது ஆட்டத்தில் அபாரமாக வென்று மும்பை அணி நம்பிக்கையை தக்க வைத்துள்ளது. ஆனால், மும்பையின் இப்போதைய சுவாரஸ்யமே அதன் புதிய பவுலர்கள் தான். முதல் ஆட்டத்தில் CSK-வை தன் அபார ஸ்பின்னால் கலங்க வைத்தார் விக்னேஷ் புதூர். நேற்று தன் முதல் போட்டியிலேயே KKR-ன் நான்கு ஹெவி வெயிட் விக்கெட்களை வீழ்த்தி சிதறடித்தார் அஷ்வனி குமார். MI-யிடம் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் உள்ளதோ?
Similar News
News April 3, 2025
சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.
News April 3, 2025
அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
News April 3, 2025
வக்ஃப் சட்ட (திருத்த) மசோதா: பாஜக செய்யும் மாற்றம் என்ன?

வக்ஃப் சட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியம் தன் சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்யவேண்டும். இதனால் சரியான மதிப்பீட்டை செய்யமுடியும். தற்போது வக்ஃப் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இனி அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவர். தலைமை செயல் அலுவலர் (mutawallis), 6 மாதங்களுக்குள் சொத்து விவரங்களை பதிவேற்ற வேண்டும். அரசு தணிக்கை செய்யும்.