News March 28, 2024

பாண்டியாவை மும்பை வீரர்கள் பழிவாங்குகிறார்களா?

image

ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே மும்பை வீரர்கள் பழிவாங்குகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். SRH-க்கு எதிரான போட்டியில் 2ஆவது முறையாக MI தோல்வியை சந்தித்தது. ஐந்து முறை கோப்பையை வென்ற MI இதைவிட மோசமாக விளையாட முடியுமா? என கேட்கும் வகையில் அந்த அணி வீரர்கள் விளையாடினர். கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்கியதன் விளைவு இது என பலரும் வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Similar News

News April 10, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது

image

போர் பதற்றத்துக்கு மத்தியில் சர்வதேச தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ் $7.26 (இந்திய மதிப்பில் ₹671) உயர்ந்து $4,756.7-க்கு வர்த்தகமாகிறது. அதேபோல், வெள்ளியும் நேற்று $73 ஆக விற்பனையான நிலையில், இன்று $75 ஆக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் இன்று தங்கம், வெள்ளி விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 10, 2026

பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

image

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் லெபனானில் இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்துவதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப் விமர்சித்திருந்தார். மேலும் இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கேன்சர் எனவும் சாடியிருந்தார். இந்நிலையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு நாடு இப்படி அப்பட்டமாக யூத விரோத கருத்துகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது.

News April 10, 2026

விஜய்க்காக கோபத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர்

image

ஜன நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இச்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விஜய்யின் இந்த புதிய படத்தை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் குறிவைத்துத் தாக்குவீர்கள் என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!