News April 8, 2025
மும்பை தாக்குதல் குற்றவாளி.. US நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹவ்வூர் ராணா அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு கொண்ட ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல் பிடிபட்டார்.
Similar News
News September 17, 2025
இளைஞர்கள் வாக்குகளை குறிவைக்கும் நிதிஷ்

பிஹாரில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அம்மாநில CM நிதிஷ், இளைஞர்களின் வாக்குகளையும் குறிவைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கல்விக்கடன் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி, கல்விக்கடன் திருப்பி செலுத்தும் அவகாசம் 5-லிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளார். இதேபோல் தான், தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது
News September 17, 2025
குறையும் Big Screen தியேட்டர் மோகம்!

இருட்டு ரூமில், பலருடன் அமர்ந்து சிரித்து, அழுது, கைத்தட்டி- விசிலடித்து கொண்டாடி படம் பார்த்த உணர்வை மக்கள், வேண்டாம் என ஒதுக்க தொடங்கிவிட்டனர். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படம் என்றாலும், கொஞ்சம் சுமாராக இருந்தாலும், OTT பக்கம் ரசிகர்கள் சென்றுவிடுகின்றனர். இதற்கு டிக்கெட் விலை, படங்களின் தரம் என பல காரணங்களும் உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க.. ரசிகர்கள் தியேட்டர் அனுபவத்தை தவறவிடுகிறார்களா?
News September 17, 2025
அமித்ஷாவிடம் EPS ஒரு மணி நேரம் பேசியது என்ன?

சசிகலா, OPS, TTV, செங்கோட்டையன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்துதான் அமித்ஷாவிடம் தனியாக EPS ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியிருக்கிறார். இதில், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக EPS சொல்லிவிட்டாராம். அதை அமைதியாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, கூட்டணி கட்சிகளின் பலம் – பலவீனம், கட்சிக்குள் அதிருப்தியில் இருக்கும் மற்றவர்களை சமாதனம் செய்வது உள்ளிட்ட பல ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறாராம்.