News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 25, 2025
திருவனந்தபுரம் பாஜக மேயர் வேட்பாளர் அறிவிப்பு

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக, மாநில செயலாளர் வி.வி ராஜேஷை பாஜக அறிவித்துள்ளது. அதேபோல், துணை மேயராக இளம் பெண் தலைவர் ஆஷாநாத் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 45 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியின் சகாப்தத்திற்கு முடிவுரை எழுதி, முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக (50 இடங்கள்) கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
News December 25, 2025
இந்தியாவுடன் எங்கள் உறவை அமெரிக்கா கெடுக்கிறது: சீனா

இந்தியாவுடனான தங்களது உறவுகளைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் பென்டகன், சீனா வேண்டுமென்றே இந்திய-அமெரிக்க நட்புக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இந்நிலையில், தங்களது எல்லைப் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என்று சீனா பதிலடி கொடுத்துள்ளது.


