News October 21, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். * என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.
Similar News
News October 21, 2025
காதல் தோல்வியில் வலி யாருக்கு அதிகம்? ரஷ்மிகா

லவ் பிரேக்கப்பின் போது பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். காதல் தோல்வியால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார் என்பதை ஏற்க மறுத்த அவர், பெண்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். ஆண்கள் போல் தாடி வளர்க்க முடியாததால், பெண்கள் படும் அவஸ்தை மற்றவர்களுக்கு தெரிவதில்லை எனவும் பேசியுள்ளார். அவரது ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படம் நவம்பர் 7-ல் வெளியாகிறது.
News October 21, 2025
திறனற்ற திமுக அரசால் மக்கள் அவதி: எல்.முருகன்

திமுக அரசின் நிர்வாக திறன் இன்மையால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு மக்களை பெருமளவு பாதித்துள்ளதாகவும், மறுபுறம் மத்திய அரசு மக்களின் நலனுக்காக GST வரிக்குறைப்பை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 21, 2025
கற்றாழையை உணவில் சேர்த்தல் இத்தனை நன்மைகள்

ஒரு குளிர்ந்த கற்றாழை ஜூஸ் உங்கள் செரிமானத்தை தூண்டி, தோலில் ஒளிரும் அழகை தரும். மேலும் உணவின் ஒரு பாகமாக இதை சேர்க்கும் போது பல நன்மைகள் கிடைக்கும்.*கற்றாழை ஜெல்லை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாகி செரிமானம் சீராகும். குடல் இயக்கத்தையும் இது தூண்டும். *கற்றாழை உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. *கற்றாழை இயற்கையான டிடாக்ஸாக செயல்பட்டு, கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கிறது.