News August 18, 2024

முகமது அலி பொன்மொழிகள்

image

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் இருக்கும் ஒருவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், எதையும் சாதிக்க மாட்டார்கள். *மற்றவர்களுக்குச் செய்யும் சேவை என்பது பூமியில் உள்ள உங்கள் அறைக்கு நீங்கள் செலுத்தும் வாடகையாகும்.

Similar News

News October 14, 2025

எந்தெந்த தொகுதி: பாஜக கூட்டணியில் குழப்பம்

image

பிஹார் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, ஜேடியு தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதனால், இன்று நடக்கவிருந்த பாஜக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 14, 2025

Sports Roundup: துணை கேப்டனான வைபவ்!

image

✱ஸ்குவாஷ்: ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, ஹயா அலியை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
✱கிரிக்கெட்: ரஞ்சி தொடரில் பிஹார் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
✱கால்பந்து: 2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட, கானா அணி தகுதி பெற்றுள்ளது. இத்தொடருக்கு தற்போது வரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

News October 14, 2025

அதிரடி ஆஃபர்.. இலவசமாக ₹1,000 ரீசார்ஜ்!

image

டோல்கேட்டில் பாத்ரூம் அசுத்தமாக இருந்தால், உடனே NHAI-யிடம் புகார் அளித்து, Fastag-க்கு ₹1,000 டாப்- அப் பெறலாம். ‘<>RajamargYatra<<>>’ App-ல் அழுக்கான பாத்ரூமின் போட்டோவுடன் நேரம் & இடத்தை குறிப்பிட்டு அப்லோட் செய்ய வேண்டும். இத்துடன், வண்டி தகவல்கள், பெயர் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். தகவல் உறுதி செய்யப்பட்டால், பணம் கிரெடிட்டாகி விடும். இது வரும் அக்.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.

error: Content is protected !!