News March 25, 2025
நாளை OTTயில் வெளியாகிறது ‘முஃபாசா’

‘தி லயன் கிங்’ திரைப்படத்தின் முன்கதையான (Prequel) ‘முஃபாசா’ நாளை OTTயில் வெளியாகவுள்ளது. Jio Hostarல் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இப்படம், OTTயில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
Similar News
News December 24, 2025
கடைசி நேரத்தில் கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றம்

விஜய் ஹசாரே டிராபி நாளை தொடங்க உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலி இதில் விளையாட உள்ளார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் டெல்லி அணி, குஜராத்துடன் நாளை <<18497857>>சின்னசாமி மைதானத்தில்<<>> மோத இருந்தன. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அங்கு போட்டியை நடத்த அம்மாநில அரசு தடை செய்துள்ளது. பெங்களூருவில் உள்ள BCCI மையத்திற்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோலி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News December 24, 2025
இந்தியா உடனான ஒப்பந்தத்தை எதிர்த்த நியூசி., அமைச்சர்

<<18642468>>இந்தியா – நியூசி.,<<>> இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நியூசி., அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்த்துள்ளார். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கே அதிக பலன் கிடைக்கும். தங்களது பால் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைக்க போவதில்லை. மேலும், இந்தியர்கள் அதிகமாக நியூசி.,யில் குடியேற வழிவகுக்கும். இந்தியா மீது மரியாதை உள்ளதால், இதை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
ராசி பலன்கள் (24.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


