News October 12, 2025
MS தோனி பொன்மொழிகள்

*உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி. *நூறு சதவிகித உழைப்பை கொடுத்தப் பின்னர், அதன் முடிவைப் பற்றி கவலைப்படாதீர்கள். *கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை இழக்காதே. *உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும். *திட்டம் சரியில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல.
Similar News
News October 12, 2025
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!
News October 12, 2025
விஜய்க்கு யோசனை கூறிய ஆந்திர DCM பவன் கல்யாண்

2026 தேர்தல் குறித்து விஜய்க்கு ஆந்திரா DCM பவன் கல்யாண் யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது தேர்தலில் தனித்து போட்டியிட்டால் சிரஞ்சீவியின் நிலை தான் ஏற்படும் என்றும் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெற்று DCM ஆகி மக்களுக்கு நல்லது செய்யலாம் எனவும் விஜய்யிடம் பவன் கல்யாண் தெரிவித்தாக கூறப்படுகிறது.
News October 12, 2025
விதிமீறல்களில் ஈடுபட்ட கோல்ட்ரிப் சிரப் நிறுவனம்

22 குழந்தைகளின் உயிரை குடித்த கோல்ட்ரிப் சிரப் தயாரித்த ஸ்ரீசென் நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்கீகாரம் பெற்ற தயாரிப்புகளை சுகம் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் தரவுத்தளத்தில் அந்நிறுவனம் ஒரு பகுதியாக இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மோசமான உள்கட்டமைப்பு இருந்தும் 10 ஆண்டுகளாக தடையின்றி இயங்கி வந்துள்ளது.