News October 18, 2025

நீல மலராக பூத்த மிருணாள்

image

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டவர் மிருணாள் தாகூர். அந்த படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தாலும், அல்ட்ரா மாடர்ன் உடைகள் தான் மிருணாளுக்கு பிடித்த சாய்ஸ். அந்தவகையில், தீபாவளி ஸ்பெஷலாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி, அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மயிலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நீல நிற சேலையில் ஜொலிக்கிறார் மிருணாள். மேலே Swipe செய்து அதை பாருங்க.

Similar News

News October 18, 2025

ஓடிடிக்கு வரும் பவன் கல்யாணின் OG!

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘They call him OG’ படம், செப்.25-ல் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அர்ஜுன் தாஸின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் அக்.23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News October 18, 2025

ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்!

image

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அவரது காதலர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சல், இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, விரைவில் ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகளாவார் என கூறினார். பலாஷ் முச்சலும், ஸ்மிருதி மந்தனாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

BREAKING: 20 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!