News April 9, 2025
MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். <
Similar News
News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News April 19, 2025
ஆங்கிலேயர்களுக்கு தண்ணீர் தர மறுத்த திருப்பத்தூர் மக்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1772ல் முதல் மாவட்டம் சேலம் உருவாக்கப்பட்டு அதற்கு மூன்று கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று திருப்பத்தூர் கலெக்டர். இந்தப் பகுதியில் கலெக்டரை நியமித்ததும் அங்கு வந்து செல்லும் ஆங்கிலேயர் தண்ணீருக்காக பொது கிணற்றை நாடி உள்ளனர். ஆனால் தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தாலும் ஆங்கிலேயர் மீது இருந்த வெறுப்பாலும் தண்ணீர், உணவு தர திருப்பத்தூர் மக்கள் மறுத்துவிட்டனர். ஷேர்
News April 18, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தில் நஷ்டமா . ..? சரி செய்ய இங்கு போங்க

திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயத்தின் சிறப்பு. இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார் அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக்காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார், அவருக்கு இறைவன் காட்சி தந்து கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். இந்த தளத்தில் நியமத்தோடு வேண்டினால் வியாபாரக்கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.