News February 25, 2025
மிஸ்டர் எக்ஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள்

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போட்டோ ஒன்றை, நடிகர் ஆர்யா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
கார்களின் விலை சரசரவென குறைந்தது

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. ஹோண்டா தனது கார்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹57,000 முதல் அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
News March 5, 2026
OPS மீதான 4 வழக்குகள் ரத்தானது!

OPS-க்கு எதிரான நான்கு வழக்குகளை சென்னை HC ரத்து செய்துள்ளது. கடந்த மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் தேர்தல் விதிமுறையை மீறியதாக OPS மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கில் போதுமான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்காததை அடுத்து OPS-க்கு எதிரான 4 வழக்குகளையும் ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News March 5, 2026
எல்லா புகழும் விஜயகாந்துக்கே: பிரேமலதா

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. எல்லா புகழும் விஜயகாந்துக்குதான் என உருக்கமாக கூறினார். அத்துடன் விஜயகாந்த் தான் தெய்வமாக இருந்து தங்களை வழிநடத்தி வருகிறார் என்றும், தேமுதிகவின் ஒவ்வொரு வெற்றியும் அவருக்கு தான் சேரும் எனவும் தெரிவித்தார்.


