News March 24, 2025

எம்பிக்களின் சம்பளம் உயர்ந்தது

image

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகளை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், எம்.பிக்களின் மாத சம்பளம் ₹1 லட்சத்தில் இருந்து ₹1.24 லட்சமாகவும், தினசரி படி ₹2000லிருந்து ₹2500ஆகவும், ஓய்வூதியம் ₹25,000லிருந்து ₹31,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News March 26, 2025

பிரேசிலை புரட்டி எடுத்த அர்ஜென்டினா.. 2026 WC தகுதி

image

2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அந்த அணி 4 கோல்களை அடித்து பிரேசிலை நிலைகுலைய வைத்தது. பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே பிரேசிலால் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 4 – 1 என்ற நிலையில் வெற்றி பெற்று அர்ஜென்டினா 2026 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.

News March 26, 2025

இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.

News March 26, 2025

BREAKING: நாளை ஸ்டிரைக்.. சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்

image

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!