News March 10, 2025
MP தமிழச்சி தங்கபாண்டியன் சரமாரி கேள்வி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News March 10, 2025
பாமக நிதிநிலை அறிக்கை: ₹318க்கு சிலிண்டர்

சமையல் எரிவாயு ₹318க்கு (₹500 மானியம்) வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. * ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹2000ஆக உயர்த்தப்படும். *முதியோர்/ ஆதரவற்றோர் உதவித்தொகை ₹3000ஆக உயர்த்தப்படும். *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹5000 வழங்கப்படும். *மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2025
பார்லி. வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்

மத்திய அமைச்சர் பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். PM SHRI திட்டத்தில் முதலில் கையெழுத்திட முன்வந்த TN CM, பின்னர் யூடர்ன் அடித்துவிட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். யாரோ ஒரு சூப்பர் முதல்வர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
News March 10, 2025
பச்சோந்தி அரசியல் செய்கிறது திமுக: ஜெயக்குமார்

PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.