News March 24, 2024
எம்.பி., கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன ஆனாது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை. மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது .
Similar News
News February 7, 2026
அப்படி ஒரு தொகுதியே இல்லங்க.. பனையூர் பரிதாபம்

‘பனையூர் தொகுதில விஜய் நிக்கனும்’ என்று தவெகவில் பலரும் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தவெக தலைமை அலுவலகம் இருக்கும் பனையூர் ஒரு தொகுதி அல்ல, அது சோழிங்கநல்லூர் தொகுதிக்குள் வருகிறது என்பதே உண்மை. இதனால், விஜய் எப்போதும் பனையூரிலேயே இருப்பதால், தொண்டர்களும் அதை தொகுதியாகவே நினைத்துவிட்டார்கள் போல என பிற கட்சியினர் கூறுகின்றனர். இப்போ என்ன சொல்றது?
News February 7, 2026
ஒரேநாளில் தலைகீழாக மாறிய வெள்ளி விலை

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.7) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கும் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்த வெள்ளி விலை இன்று அப்படியே தலைகீழாக அதிகரித்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 7, 2026
‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.


