News April 5, 2024
நாளை வெளியாகும் திரைப்படங்கள்

விஜய் தேவரகொண்டா, மிர்னால் தாகூர் நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம், நாளை (ஏப். 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், வல்லவன் வகுத்ததடா, வொயிட் ரோஸ், டபுள் டக்கர், ஒரு தவறு செய்தால், இரவின் கண்கள் உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களும் நாளை திரைக்கு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் நடித்த ‘ஹனுமான்’ திரைப்படம், ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
Similar News
News January 17, 2026
பிரபல நடிகை காலமானார்

நடந்து சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை கியானா அண்டர்வுட் (33) மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘All That’ என்ற சீரிஸில் 7 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், The 24 Hour Woman, Death of a Dynasty ஆகிய படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது இறப்புக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 17, 2026
கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பொங்கலுக்காக வாங்கிய கரும்பு மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில் தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை காய்ச்சி சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ’கரும்பு தேநீர்’ ரெடி!
News January 17, 2026
AR ரஹ்மான் அதிக வெறுப்பு கொண்ட மனிதர்: கங்கனா

AR ரஹ்மான் போல அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என பாஜக MP கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மத ரீதியான பாகுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததாக ARR சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, ‘எமர்ஜென்சி’ பட கதையை சொல்ல வந்தபோது, தன்னை சந்திக்கக்கூட ARR மறுத்துவிட்டதாகவும், வெறுப்பால் அவர் பார்வையற்றவர் ஆகிவிட்டதாகவும் கங்கனா விமர்சித்துள்ளார்.


