News August 5, 2024

மகாவீரரின் பொன்மொழிகள்

image

✍நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுதான் அஹிம்சை தத்துவம்தான். ✍உண்மையாக இருப்பவனுக்கு உபதேசங்கள் தேவையில்லை. ✍பகிர்ந்த துன்பம் பாதியாகிறது; பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது. ✍ஒவ்வொரு சொல்லுக்கும் ஆற்றல் உள்ளது; எனவே எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேசுங்கள். ✍உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. ✍பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும். ✍உண்மைக்கு வரம்பு உண்டு; பொய்க்கு வரம்பு இல்லை.

Similar News

News January 17, 2026

கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

image

பொங்கலுக்காக வாங்கிய கரும்பு மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில் தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை காய்ச்சி சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ’கரும்பு தேநீர்’ ரெடி!

News January 17, 2026

AR ரஹ்மான் அதிக வெறுப்பு கொண்ட மனிதர்: கங்கனா

image

AR ரஹ்மான் போல அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என பாஜக MP கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மத ரீதியான பாகுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததாக ARR சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, ‘எமர்ஜென்சி’ பட கதையை சொல்ல வந்தபோது, தன்னை சந்திக்கக்கூட ARR மறுத்துவிட்டதாகவும், வெறுப்பால் அவர் பார்வையற்றவர் ஆகிவிட்டதாகவும் கங்கனா விமர்சித்துள்ளார்.

News January 17, 2026

தவெகவில் இணைகிறாரா முன்னாள் மத்திய அமைச்சர்?

image

தஞ்சையில் நடந்த மகளிர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டதால், திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் S.S.பழனிமாணிக்கம், தவெகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தன்னை அடையாளப்படுத்தியது திமுகதான். வரும் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன், இல்லையென்றால் தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவேன். என் உயிர் மூச்சு உள்ளவரை திமுகதான் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!