News April 15, 2024
காமராஜரின் பொன்மொழிகள்

✍எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை; வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை. ✍எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம். ✍பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை; சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே! ✍ சில சமயம் முட்டாளாய்க் காட்சியளிப்பது அறிவுள்ள செயல். ✍சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்; பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
Similar News
News November 24, 2025
SC-ன் 53-வது தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யகாந்த்?

ஹரியானாவின் ஹிசாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த இவர், பஞ்சாப், ஹரியானா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சல் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2019 மே மாதம் SC நீதிபதியானார். J&K 370 சட்டப்பிரிவு நீக்கம், பிஹார் SIR, பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் சூர்யகாந்த் அங்கம் வகித்திருந்தார்.
News November 24, 2025
இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
News November 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.


