News April 14, 2024
வள்ளலாரின் பொன்மொழிகள்

✍மனதை அடக்க நினைத்தால் அடங்காது; அதை அறிய நினைத்தால் அடங்கும். ✍தவறு செய்வதும் மனம் தான்; இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான். ✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. ✍உண்மையைச் சொல்! அது உனது மரியாதையை பாதுகாக்கும். ✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். ✍சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
Similar News
News November 24, 2025
இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
News November 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News November 24, 2025
542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


