News May 13, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ ஒருவனை அகந்தை ஆட்கொண்டால், அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும். ➤ மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட, ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல். ➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான். ➤ வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே. ➤கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

Similar News

News August 23, 2025

போதை பழக்கத்தை தடுக்க புதிய முயற்சி: CBSE அறிவிப்பு

image

மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் (NCB), CBSE ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதன்படி, போதைப் பொருள்களை தடுப்பது குறித்து, நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மாணவர்களிடம் போதைப் பழக்கத்தின் தீமைகள், பாசிடிவ் லைப்ஸ்டைலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். தமிழக அரசும் இதை பின்பற்றலாமே?

News August 23, 2025

ராசி பலன்கள் (23.08.2025)

image

➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – கவலை ➤ மிதுனம் – பக்தி ➤ கடகம் – பரிசு ➤ சிம்மம் – நன்மை ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – சிக்கல் ➤ தனுசு – நோய் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – திறமை ➤ மீனம் – சாதனை.

News August 23, 2025

Gpay, Phonepe பயன்படுத்த கட்டணம்?

image

இதுவரை இலவசமாக உள்ள UPI சேவைக்கு, விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் UPI சேவையை இலவசமாக வழங்க முடியாது என RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியபோதே இந்த சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சில்லறை வணிக பரிவர்த்தனையை கையாளும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 0.25% ஊக்கத்தொகையை அரசு தற்போது 0.15% ஆகக் குறைத்துள்ளதால், விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

error: Content is protected !!