News May 24, 2024
நபிகள் நாயகனாரின் பொன்மொழிகள்

✍ அன்புதான் இறைவனின் உரைவிடம் என்பதை அறியாதே அறிவே இறைவனின் உறைவிடத்தை தேடி அலைகிறது. ✍உழைப்பாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள். ✍இறைவன் நம் உருவத்தையே செல்வதையோ பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையும் செயலையும் பார்க்கிறான். ✍நாம் யாருக்கும் மேலோரல்ல; நமக்கு யாரும் மேலோர் அல்ல. ✍மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன.
Similar News
News March 8, 2026
எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.
News March 8, 2026
நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.
News March 8, 2026
ராசி பலன்கள் (08.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


