News November 29, 2024
மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழிகள்

*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *நாங்கள் அனைவரும் வெவ்வேறு கப்பல்களில் வந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது ஒரே படகில் இருக்கிறோம். *சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன. *சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட துன்பகரமானது எதுவும் இல்லை.
Similar News
News August 23, 2025
வெளுக்கும் மழை.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

இன்று கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விடுமுறை விடப்படுமா என பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், சூழ்நிலையை பொறுத்துதான் விடுமுறை குறித்த முடிவு எடுக்கப்படும். மழை பெய்யும் மாவட்டங்களில் குடை, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை மாணவர்கள் எடுத்து செல்லவும்.
News August 23, 2025
முதுகுவலியால் கஷ்டமா.. உதவும் சுப்த வஜ்ராசனம்!

✦முதுகெலும்பு நரம்புகள், தோள்கள் & முதுகை வலுப்படுத்த உதவும்.
✦தோள்பட்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த யோகா உதவும்,
➥படத்தில் உள்ளது போல, காலை முட்டி போட்டு, முதுகை நேராக வைத்து படி உட்காரவும்.
➥மெதுவாக மெல்ல பின்னோக்கி சாய்ந்து, தலை- கழுத்து- முதுகு தரையில் படும்படி(படத்தில் உள்ளபடி) படுக்கவும்.
➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 23, 2025
TN அரசியல் தெரிந்தபின் விஜய் அரசியலுக்கு வரட்டும்: எச்.ராஜா

தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர விஜய் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். பாஜக கொள்கை ரீதியான எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? என கேட்டார். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன் என்றார். மேலும், வாக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.