News June 17, 2024
மஹாவீரரின் பொன்மொழிகள்

✍பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருப்பதே உண்மையான வீரமாகும். ✍கோபம் அன்பை அழிக்கிறது; செருக்கு அடக்கத்தை அழிக்கிறது. ✍உண்மைக்கு வரம்புண்டு; பொய்க்கு வரம்பில்லை. ✍பகிர்ந்த துன்பம் பாதியாகிறது; பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது. ✍கோபத்தை வென்று விட்டால், அடக்கம் தானாக வரும்.✍மனசாட்சிப்படி நடப்பவனுக்கு உபதேசங்கள் தேவையில்லை. ✍நம்பிக்கையே வாழ்க்கையில் ஒருவனுக்கு மிகச்சிறந்த உற்றத் துணையாகும்.
Similar News
News March 15, 2026
வெள்ளி விலை இந்த வாரம் ₹10,000 குறைந்தது!

வெள்ளி விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார இறுதியில் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,80,000 ஆக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் மார்ச் முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளியின் விலை, சர்வதேச சந்தையிலும் 6% குறைந்து 1 அவுன்ஸ் 80 டாலராக உள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்.
News March 15, 2026
விஜய்யை திசைதிருப்ப திமுக திட்டமா?

<<19382831>>லயோலாவின் IPDS<<>> நடத்திய கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் திமுகவை, தவெக விஞ்சிவிட்டதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் களம் மட்டுமின்றி SM-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA-வுடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை திசைதிருப்பி தனித்து களம் காணும் ஆசையை மேம்படுத்தவே ‘இந்த திணிப்பை’ திமுக திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News March 15, 2026
இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு

PNG(Piped Natural Gas) இணைப்புகளுடன் கூடிய வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PNG வசதியை பயன்படுத்துவோர் தங்களது வீட்டு உபயோகத்திற்காக LPG சிலிண்டர்களை பெறுவது முறையல்ல என்றும், அப்படி பயன்படுத்தினால் LPG-யை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. TN-ல் சென்னை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 1.32 லட்சம் வீடுகள் PNG பயன்படுத்துகின்றன.


