News November 24, 2024

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

image

*கூட்டத்தில் நிற்பது எளிதானது. தனியாக நிற்பதற்குதான் தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் வலிமையானவர்களின் பண்பு. *நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது. *நீங்கள் உலகை மாற்ற விரும்பினால், உங்களிடமிருந்து தொடங்குங்கள். *எப்போதும் உண்மையானவராகவும், கனிவானவராகவும், அச்சமற்றவராகவும் இருங்கள்.

Similar News

News December 5, 2025

தள்ளிப்போன ஜனநாயகன் அப்டேட்

image

டிச.27-ல் மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனிடையே, படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், நேற்று AVM சரவணன் மறைவால், இந்த அப்டேட் தள்ளிப்போயுள்ளது. இதனால், அடுத்த சில நாள்களில் 2-வது பாடல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி கச்சேரிக்கு ரெடியா நண்பா, நண்பி?

News December 5, 2025

டிச.14-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

image

டிச.14-ல், திருவண்ணாமலை கலைஞர் திடலில், திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News December 5, 2025

BREAKING: மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி

image

ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சூரி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சூரியின் ஷூட்டிங்கில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக, X தளத்தில் அவரை டேக் செய்து ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு, ஷூட்டிங்கில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சூரி குறிப்பிட்டுள்ளார். இனி கவனமுடன் இருக்க சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம் என சூரி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!