News November 25, 2024
ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

*வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். *வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது. *முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். *நான் யாரையும் நம்புவதில்லை, என்னையே கூட நம்புவதில்லை. *எழுத்தாளர்கள் மனித ஆன்மாக்களின் பொறியாளர்கள்.
Similar News
News November 19, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மும்பையில் சிக்கிய மூவர்

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக மும்பையை சேர்ந்த 3 பேரை பிடித்து NIA விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின் மூவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரத்யேக தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் NIA தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.
News November 19, 2025
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட, எழும் வேகம் அதிகமாக இருந்தால். தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.
News November 19, 2025
இந்தியாவின் பயிற்சியில் புதிய சுழற்பந்து வீச்சாளர்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் கௌசிக்கை வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கௌசிக் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையிலும் போடும் திறமை கொண்டவர்.


