News October 11, 2024
ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

* துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. நாம் நம் எதிரிகளை துப்பாக்கிகளை வைத்திருக்க விடமாட்டோம், நாம் ஏன் அவர்கள் யோசனைகளை வைத்திருக்க விடவேண்டும்.
*வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல, வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது.
*கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
Similar News
News August 12, 2025
துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News August 12, 2025
விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.