News September 28, 2025
உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.
Similar News
News January 28, 2026
கோவாவில் சிறுவர்களுக்கு SM-ஐ தடை செய்ய பரிசீலனை

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்க கோவா அரசு பரிசீலனை செய்து வருகிறது. SM பயன்பாட்டால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாக உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவாவிலும் சாத்தியம் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார்.
News January 28, 2026
ராசி பலன்கள் (28.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 28, 2026
BREAKING: காங்., உடன் திமுக கூட்டணி பேசவில்லை

காங்., கட்சியுடன் திமுக, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று தமிழக காங்., பொறுப்பாளர் ஷோடங்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். டிச.3-ல் ஸ்டாலினை சந்தித்து, டிச.13-க்குள் கூட்டணி முடிவை உறுதி செய்யக் கோரினோம். திமுகவின் பதிலுக்காக 2 மாதங்கள் காத்திருந்தும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற அவர், திமுக தரப்பில் இருந்து ஏன் இவ்வளவு தாமதம் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.


