News March 27, 2024
தாய் வீட்டு சீதனம் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சகோதரர் ஸ்டாலின் வழங்கும் 1000 ரூபாய், தாய் வீட்டு சீர் என பெண்கள் கூறுவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் திராவிட மாடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
டிசம்பர் 7: வரலாற்றில் இன்று

*1926–அரசியல்வாதி கே.ஏ.மதியழகன் பிறந்தநாள் *1939–பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் *1941–PEARL HARBOUR தாக்குதலில் 2,402 வீரர்கள் உயிரிழந்தனர்
*1949-கொடி நாள் கடைபிடிப்பு *2016–நடிகர், பத்திரிகையாளர் சோ நினைவு நாள்
News December 7, 2025
பிக்பாஸில் இந்த வார எவிக்ஷன்.. இவர் தான்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பிரஜின் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வார எவிக்ஷனில் கனி, விஜே பாரு, விக்கல்ஸ் விக்ரம், அமித், பிரஜின், சாண்ட்ரா, FJ, கானா விநோத், சுபிக்ஷா குமார் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமித், சுபிக்ஷா எவிக்ட் ஆனதாக வதந்தி பரவியது.
News December 7, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர், 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றமும், மன அழுத்தமும் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநலன் ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.


