News March 1, 2025

மகனை துடிதுடிக்க கொன்ற தாய்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

பூந்தமல்லியில் 6 வயது மகனை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018இல் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி என்ற பெண் தனது மகன் ஜெயகாந்தை தலையணையால் அழுத்தி, கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசினார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீனாட்சி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். இப்படியும் ஒரு தாயா?

Similar News

News March 1, 2025

நிழல் பட்ஜெட் என்றால் என்ன?

image

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன், நிழல் பட்ஜெட் வெளியிடுவதை பாமக வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில், அரசு பட்ஜெட்டில் இந்த இந்த அம்சங்கள் இடம் பெறலாம் என்று விளக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள அம்சங்களை பல நேரங்களில் நிதியமைச்சர் எடுத்துக் கொள்வதும் உண்டு. வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், நிதிப்பகிர்வு ஆகியவை நிழல் பட்ஜெட்டிலும் இடம்பெறும்.

News March 1, 2025

வார இறுதி விடுமுறை.. 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தால் 600 அரசு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று 245, இன்று 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நேற்றும், இன்றும் தலா 51 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நேற்றும், இன்றும் தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News March 1, 2025

உச்சநீதிமன்றத்தை நாடிய சீமான்: மார்ச் 7ல் விசாரணை?

image

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயலெட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

error: Content is protected !!