News November 24, 2024
5 வயது மகளை கொன்ற தாய்.. அதிர்ச்சி பின்னணி

டெல்லி அசோக் விஹாரில் இச்சம்பவம் நடந்துள்ளது. HP’யை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் இன்ஸ்டாவில் டெல்லியைச் சேர்ந்த வேறொருவரை காதலித்தார். திருமண ஆசையில் டெல்லி வந்தவரை காதலனின் குடும்பம் ஏற்க மறுத்துள்ளது. காரணம், அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள் (5) உள்ளார். திருமணத் தடையால், விரக்தியில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மீது தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
பீகார் முதலமைச்சருக்கு புதுவை முதல்வர் வாழ்த்து

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், 10-வது முறையாக பீகார் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்க ளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பீகார் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை, செய்த சாதனைகள், மக்கள் சேவைகள் மீண்டும் தங்களின் தலைமையில் தொடர வேண்டும். புதுவை மக்கள் சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் வாழ்த்துகள் என்றார்.
News November 20, 2025
விஜயகாந்த் மரணம்.. வடிவேலு முதல்முறை கண் கலங்கினார்

விஜயகாந்த் மறைவின்போது வடிவேலு செல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கேப்டன் மறைவின் போது சென்றிருந்தாலும், அவரை இப்படி திட்டிவிட்டு எதற்காக இப்போது வந்தார் என கேட்டிருப்பார்கள் என வடிவேலு வருத்தத்துடன் பகிர்ந்ததாக நடிகர் குரு லக்ஷ்மன் கூறியுள்ளார். விஜயகாந்த் சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று கூறி, வடிவேலு கண் கலங்கியதாகவும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
கவர்னர் விவகாரத்தில் SC-யின் 2 மாறுபட்ட விளக்கங்கள்

*மாநில சட்டப்பேரவையின் மசோதா மீது முடிவெடுக்க 1 முதல் 3 மாதம் கெடு விதித்தது ஏப்.8-ல் SC வழங்கிய தீர்ப்பு. இன்றைய தீர்ப்பில் காலக்கெடு நீக்கப்பட்டது *பிரிவு 201-ன் கீழ் ஜனாதிபதிக்கு இருந்த காலக்கெடுவும் ‘நியாயமான காலத்துக்குள்’ என மாற்றப்பட்டது. *காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்கவில்லை எனில், ஒப்புதல் அளித்ததாக கோர்ட் முடிவு செய்யும் என்பதும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


