News April 22, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

▶ அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான். ▶ அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும். ▶ கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும். ▶ இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
Similar News
News April 22, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருட்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருட்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது: ✦வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிஷ்டத்தை உண்டாக்கும் ✦கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருட்கள் (வாசப்படி மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ✦உடைந்த சேதமடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
News April 22, 2025
சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!

ஐபிஎல் தொடரில் அதகளம் செய்து வருகிறார் குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன். 8 போட்டிகளில் விளையாடிய அவர், 5 அரைசதம் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சாய் சுதர்சன் விளையாடுவதை பார்க்க அருமையாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இந்திய அணிக்காக விளையாடுவதை காண ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 22, 2025
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்க உள்ளது. டாஸ்மாக்கில் ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்தது. ஆனால், சோதனை சட்டவிரோதமானது என டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நாளை தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.