News August 26, 2025
தனது பிறந்த தினத்தை மாற்றிய அன்னை தெரசா.. ஏன்?

’அன்பின் கை’ அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. அன்னை தெரசா எனும் ஆக்னஸ் பிறந்தது என்னவோ ஆக.26, 1910-ல் தான். ஆனால் அவரோ ஆக.27-ஐ தான் தன்னுடைய பிறந்தநாளாக கருதி வாழ்ந்துள்ளார். தெரசா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவர் பிறந்த அடுத்த நாளிலேயே (ஆக.27) ஞானஸ்நானம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதிருந்த அதீத பக்தியால் ஞானஸ்நானம் எடுத்த தினத்தையே தன்னுடைய பிறந்தநாளாக அவர் கருதியுள்ளார்.
Similar News
News August 26, 2025
BREAKING: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு செப்.15 – 26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.10 – 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும்.
News August 26, 2025
சட்டம் அறிவோம்: குழந்தையை கைவிடுவோருக்கான தண்டனை

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து BNS சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. SHARE IT.
News August 26, 2025
திமுகவுக்கு வந்த புது நெருக்கடி

TN-ல் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. 2 MLA-க்கள் இருந்தும் மமக-வுக்கு நெருக்கடி ஏற்பட காரணம் 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுதான். இதனால், 2026 தேர்தலில் மமக, கொமதேக தனி சின்னத்தில் போட்டியிட திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறது.