News April 10, 2025
மருமகனுடன் மாமியார் காதல்.. கண்ணீருடன் கணவர்

உ.பி.யில் சொந்த மகளுக்கு நிச்சயம் செய்த வருங்கால மருமகனுடன் (வயது 20), மாமியார் (வயது 40) <<16041082>>ஓட்டம் <<>>பிடித்தார். இந்த செய்தி தான் நேற்று முழுவதும் ட்ரெண்டிங். இந்நிலையில், அப்பெண்ணின் (மாமியார்) கணவர், மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகை மற்றும் ₹10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்து தறுமாறும் கண்ணீருடன் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.
Similar News
News November 25, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் கியூஷூ பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தான் ஜப்பான் அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
News November 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை கண்காணிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். ஏரிகள், அணைகள் உள்ளிட்டவற்றின் நீர் இருப்பை முழு கொள்ளளவில் இருந்து 20% வரை குறைக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
News November 25, 2025
Layoff-ல் இணைந்த ஆப்பிள் நிறுவனம்

கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என பெரும் நிறுவனங்கள் Layoff செய்தபோதும், ஆப்பிள் அந்த முறையை கையாளாமல் இருந்தது. தற்போது, ஆப்பிள் நிறுவனமும் Layoff அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் உடனான ஈடுபாட்டை வலுப்படுத்த, சேல்ஸ் குழுவில் சில மாற்றங்களை செய்வதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணி நீக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


