News April 16, 2024
குழந்தையை கொன்று தாய் தற்கொலை

ஈரோடு மாவட்டத்தில் 3 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த கோகிலவாணியின் (25) கணவர் சசிதரன் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தனிமையை தாங்கிக் கொள்ள முடியாத கோகிலவாணி, பவானியில் லாட்ஜ் எடுத்து தங்கி தற்கொலை செய்திருக்கிறார். இந்த விபரீத முடிவுக்கு முன் குழந்தையையும் கொலை செய்திருக்கிறார்.
Similar News
News August 15, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் எப்படி வழிபட வேண்டும்!

★வீட்டின் அனைத்து இடங்களிலும், தீர்த்த பொடியை(பச்சைக் கற்பூரம் & ஏலக்காய்) தெளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
★அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
★அஷ்டமி அன்று முடிந்த தானத்தை பிறருக்கு செய்யுங்கள்.
★பூஜைக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை படைக்கலாம்.
News August 15, 2025
கேரள நடிகை போக்சோவில் கைது.. திடுக்கிடும் தகவல்

கைதான <<17400462>>நடிகை மினு முனீர்<<>> பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார சிறுமியை சீரியலில் நடிக்க வைப்பதாக சென்னை அழைத்து வந்துள்ளார். தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமியிடம் மினு முனீர் அனுமதியுடனே 4 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி கொடுத்த புகாரின்பேரில், நடிகை கைதாகியுள்ளார். அந்த 4 பேரையும் கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
News August 15, 2025
அதிமுகவில் துரைமுருகன் இருந்திருந்தால்.. EPS பேச்சு

எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் நேரடியாக அரசியலுக்கு வந்த உதயநிதி, இன்று DCM-ஆக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், துரைமுருகனும் மிசாவில் இருந்தவர்தான், அவருக்கு ஏன் உயர் பொறுப்பு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ஆனால், துரைமுருகன் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு என்றும் அவர் கூறினார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?