News April 24, 2024
முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரிலேயே மும்பை வீரர் ரோஹித் ஷர்மாவை வீழ்த்தியதன் மூலம் போல்ட் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (28) வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரைத் தொடர்ந்து புவனேஷ் குமார் (27), பிரவீன் குமார் (15), சந்தீப் ஷர்மா (13), தீபக் சாஹர் (12), ஜாஹீர் கான் (12) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் Pongal Celebration Clicks!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே குளித்து புத்தாடைகள் அணிந்து லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வருகின்றனர். இந்நிலையில், புத்தரிசி, கரும்பு, வெல்லமுமாக பானையில் பொங்கல் பொங்கி வருவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்க்க மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.
News January 15, 2026
வரும் பிப்ரவரி 14-ம் தேதி தனுஷுக்கு டும் டும் டும்?

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், இருவரும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளிவந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News January 15, 2026
சாத்தியமில்லாத ஒரே நாடு, ஒரே தேர்தல்: கார்த்தி சிதம்பரம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று, அதை காங்., கடுமையாக எதிர்க்கிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது நம்முடைய அரசியல் சாசனத்திற்கும் நம் ஆட்சி முறைக்கும் எதிரானது எனக் கூறிய அவர், அடிக்கடி தேர்தல் நடைபெறும்போது, மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள். இல்லையென்றால் மெத்தனப்போக்கோடு இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


