News May 10, 2024

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள்

image

பயனர்கள் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான டாப் 10 சமூக வலைதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 38.95% பயனாளர்களுடன் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. X தளம் – 16.36%, இன்ஸ்டாகிராம் – 15.05%, Reddit – 7.85%, லின்க்டுஇன் – 7.78%, ட்விச் – 5.11%, டிக்டாக் – 2.82%, Pinterest – 2.81%, Discord – 2.58% பயனர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் எது?

Similar News

News October 27, 2025

FLASH: மீண்டும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

image

கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(அக்.27) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 84,457 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 25,858 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Kotak Mahindra, HDFC Bank, ICICI Bank, Tata Steel உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News October 27, 2025

இன்று விசாரணைக்கு வரும் தவெகவுக்கு எதிரான வழக்குகள்

image

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. N.ஆனந்த் முன்ஜாமீன் கோரிய மனு, கலெக்டர், எஸ்பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியது, பிரச்சாரத்தின் போது, அடிப்படை வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்க கோரிய வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன. இதனால் தவெக வட்டாரம் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

News October 27, 2025

பிஹாரில் களமிறங்கும் காங்கிரஸ் தலைகள்

image

பிஹார் தேர்தலுக்காக அக்.29, 30 தேதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். பிஹாருக்கான சட்டமன்ற தேர்தல் நவ. 6,11 தேதிகளில் இருகட்டங்களாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில், ராகுலுடன் இணைந்து பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் காங்.,-க்கும், RJD-க்கு பூசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!