News April 10, 2025
IPL-ல் அதிக அரை சதம்.. சமன் செய்வாரா விராட் கோலி?

IPL வரலாற்றில் சன் ரைசர்ஸ் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், 184 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 66 அரை சதங்களை விளாசியுள்ளார். அதற்கடுத்து கோலி 257 போட்டிகளில் விளையாடி 65 அரை சதங்கள் விளாசியிருக்கிறார். இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கோலி அரைசதம் விளாசினால், டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்வார். இது இன்று நடக்குமா? நடக்காதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News January 7, 2026
புதுச்சேரி: 12th போதும் அரசு வேலை ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
என் நண்பர் நெதன்யாகு: PM மோடி

இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன், PM மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது நண்பர் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது பற்றி பேசியதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்த்து போராடுவதை இருநாடுகளும் உறுதிப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் ஜன.9-ல் தீர்ப்பு வழங்கப்படும் என மெட்ராஸ் HC தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, தணிக்கை வாரியம் விதிகளை காற்றில் பறக்கவிட்டதாக படக்குழு குற்றஞ்சாட்டியது. கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், உடனடியாக சான்றிதழ் வழங்குவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


