News October 24, 2024

அதிக டக் அவுட்: மோசமான சாதனை

image

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன்களில் தோனியுடன் 3வது இடத்தை பகிர்ந்துகொண்டார். இருவரும் 11 முறை டக் அவுட்டாகியுள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 16 முறையும், கங்குலி 13 முறையும் டக் அவுட்டாகியுள்ளனர்.

Similar News

News August 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 7 – ஆடி 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை.

News August 7, 2025

யாருக்காகவும் கிரிக்கெட் நிற்காது: கங்குலி

image

டெஸ்ட், டி20 -களில் ஓய்வு அறிவித்த வீரர்கள் ODI-ல் விளையாடுவார்களா என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது எனவும், கவாஸ்கர் சென்ற பிறகு சச்சின் வந்தார், டிராவிட், சேவாக், லக்‌ஷ்மனுக்கு பிறகு கோலி உதித்தெழுந்தார். தற்போது ஜெய்ஸ்வால், பண்ட், கில் இருக்கின்றனர். உள்ளூர் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 7, 2025

திருப்பூர் SSI படுகொலை: இருவர் கைது

image

திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை – மகன்களுக்கு இடையிலான சொத்து தகராறை <<17316893>>விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டார்<<>>. இக்கொலை வழக்கில் 3 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியை மாவட்ட எஸ்.பி அலுவலகம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!