News August 27, 2024
ஆதாரில் இலவச திருத்தம் செய்ய மேலும் அவகாசம்

ஆதார் அட்டையில் இலவசமாக புதுப்பிக்க, செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை, முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்நிலையில், பெயர், முகவரி, புகைப்படம் மாற்றம் போன்ற பணிகளை செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது. மாற்றம் செய்ய உள்ளவர்கள், ஓட்டர் ஐடி, லைசென்ஸ் போன்ற ஆவணங்களுடன், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். <
Similar News
News October 28, 2025
புதுச்சேரி ஆளும் கூட்டணியில் இருந்து விலகினார்

சுயேச்சை MLA நேரு, ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 2021 தேர்தலில் உருளையன்பேட்டையில் வென்ற அவர், ஆளும் NR காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனிடையே, CM ரங்கசாமி, பாஜகவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்ததால் புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை உருவானதாக நேரு கூறினார். கட்சி தொடக்க விழாவில் பெரியார் படம் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.
News October 28, 2025
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 2025 மாதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யவும்.
News October 28, 2025
இந்த படத்துடன் மோதுகிறதா சிம்புவின் ’அரசன்’?

சிம்புவின் ’அரசன்’ படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி முதல் வாரத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழ் புத்தாண்டுக்கு தான் சூர்யாவின் கருப்பு படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், சூர்யாவின் கருப்பு ரிலீஸில் மீண்டும் மாற்றம் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


