News August 4, 2024
9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News December 1, 2025
முகத்தில் இத தடவுறீங்களா? ALERT!

முகத்தில் எலுமிச்சை சாறை தடவுவதால் நன்மை கிடைப்பதை விட சருமத்துக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிம்பிள்ஸை அதிகமாக்கும், சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைக்கிறதாம். எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவுவதற்கு பதிலாக அதனை குடித்தால் நன்மை கிடைக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News December 1, 2025
உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலகளவில் பல்வேறு துறைசார்ந்த தரவரிசை பட்டியல்களில் இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை உள்ளிட்ட சில துறைகளில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில், எந்தெந்த துறைகளில் இந்தியா எந்த தரவரிசையில் உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


