News August 2, 2024
பேரிடர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: கார்கே

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 7, 2025
தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
News December 7, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <


