News February 15, 2025
காவல்நிலையப் பணிகளில் அதிக பெண் போலீஸ்

காவல்நிலையப் பணிகளில் அதிக பெண் போலீசை ஈடுபடுத்தும்படி, அனைத்து மண்டல காவல் அதிகாரிகளுக்கும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், புகார்களைப் பெறவும், முறையாக கையாளவும் மகளிர் போலீசே சரியாக இருப்பர், இதற்கு ஏதுவாக கேம்ப் அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர் போலீசை இப்பணியில் ஈடுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 26, 2025
‘Word of the Year 2025’ இது தானா?

திடீரென உருவான ஒரு வார்த்தையை மக்கள் அதிகளவில் விரும்பி பேசினால், அதை Word of the year என்று ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி அறிவிக்கும். அதன்படி, 2025-ன் Word of the year பட்டியலில் Aura Farming, Biohack, Rage Bait இடம்பெற்றுள்ளன. இதன் முடிவுகள் டிச.1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இந்த வருடம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை எது?
News November 26, 2025
சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.
News November 26, 2025
ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.


