News April 12, 2025

மாதம் ₹5000 உதவித்தொகை: உடனே அப்ளை பண்ணுங்க

image

PM INTERNSHIP திட்டத்தின் கீழ், வேலைதேடும் இளைஞர்களுக்கு, டாப் 500 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மத்திய அரசு பயிற்சி அளித்துவருகிறது. மேலும், மாதம் ரூ.5,000-யும், ஒருமுறை ரூ.6,000 உதவித் தொகையையும் அளிக்கிறது. இந்த திட்டத்திற்கு <>விண்ணப்பிக்க<<>> வருகிற 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே உள்ளன. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News August 21, 2025

BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

மக்கள் மன்னன், பெரியாரின் பேரன் விஜய் என புகழாரம்

image

மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

News August 21, 2025

தவெக மாநாடு: 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி

image

மதுரையில் தவெக மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் வெயில் தாங்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவரை சுமார் 50 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில், உடல்நலக் கோளாறு ஏற்பட்ட 9 பேர் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு ஹாஸ்பிடலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!