News February 17, 2025
மாதம் ரூ.1,000 உதவித் தொகை.. தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு, 9- 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 6,695 பேருக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக 8ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 22ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று dge.tn.gov.in-இல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News December 7, 2025
2050-ல் குடிக்க சுத்தமான நீர் கூட கிடைக்காது!

2050-ல் உலகம் முழுவதும் 22 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. வியன்னாவின் MCH, உலக வங்கி இணைந்து ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் நகர்ப்புறமாக்கல் தொடர்ந்தால் 19 கோடி பேர் கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லாமல் அவதிப்படுவார்கள், நீருக்காக அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என்றும் தெரியவந்துள்ளது.
News December 7, 2025
11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) TN-ல் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் கவனமாக பயணிக்கவும் மக்களே. உங்கள் ஊரில் மழை கொட்டுகிறதா?
News December 7, 2025
டிசம்பர் 7: வரலாற்றில் இன்று

*1926–அரசியல்வாதி கே.ஏ.மதியழகன் பிறந்தநாள் *1939–பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் *1941–PEARL HARBOUR தாக்குதலில் 2,402 வீரர்கள் உயிரிழந்தனர்
*1949-கொடி நாள் கடைபிடிப்பு *2016–நடிகர், பத்திரிகையாளர் சோ நினைவு நாள்


