News September 15, 2025
மாதம் ₹2,000 உதவித்தொகை.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெற்றோர் இருவரையும் இழந்த (அ) ஒருவரை இழந்து, மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து, தொடர்ந்து பாதுகாத்திட இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 6,082 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறவுள்ளனர்.
Similar News
News September 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 25-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி கூறியிருந்தார்.
News September 15, 2025
PHOTOS: கண்களை கவரும் கலர்புல் தெருக்கள்

உலகளவில் மிகவும் வண்ணமயமான, கண்களை கவரும் 10 தெருக்களின் புகைப்படங்களை மேலே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இதேபோல், நீங்கள் நேரில் பார்த்த கலர்புல் தெரு அல்லது இடங்களை கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share செய்து, அவர்களையும் கமெண்ட் செய்ய செல்லுங்க.
News September 15, 2025
இந்தியா மீது புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்!

ஆசிய கோப்பை போட்டி முடிந்த பிறகு, கை கொடுக்காமல் புறக்கணித்த இந்திய அணி மீது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புகார் அளித்துள்ளது. இது ICC-யின் Spirit of cricket-க்கு எதிரானது எனவும் பாகிஸ்தான் அணி சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய அணியின் செயலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, Post match Presentation-ல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.