News September 5, 2025

மாதம் ₹12,400 உதவித்தொகை.. உடனே அப்ளை பண்ணுங்க

image

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <>https://www.aicte.gov.in/<<>> தளத்தில் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

Similar News

News September 5, 2025

வலிமையுடன் இந்தியா – USA உறவு: பியூஷ் கோயல்

image

இந்தியா – USA இடையிலான உறவு என்பது மிகுந்த வலிமையுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா மீது USA 50% வரி விதித்தது பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பியூஷுன் கருத்து கவனம் பெற்றுள்ளது. ஒரு சில கருத்துகள் தற்காலிகமாகவே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, புதிதாக 50 நாடுகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 5, ஆவணி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News September 5, 2025

மதராஸியை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்: SK

image

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு முழு Action Entertainer படத்தை கொடுப்பதற்காக எங்களால் (படக்குழு) முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது X பதிவில், ரசிகர்கள் அனைவரும் தங்களின் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார். நீங்க எப்போ படம் பார்க்க போறீங்க?

error: Content is protected !!