News September 25, 2025
மாதம் ₹1,000 உதவித்தொகை.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2025-26 கல்வியாண்டிற்கான ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களை CM ஸ்டாலின், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் படித்து சாதித்த பல மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இத்திட்டங்களில் இந்தாண்டில் கூடுதலாக 2.65 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Similar News
News September 26, 2025
அன்று கட்டை விரல், இன்று NEP: தியாகராஜன் குமாரராஜா

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருந்தார்கள் என்று ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார். முன்பு, ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கையாக கேட்டதை போல, கற்றவை எல்லாம் மறந்து போக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்தது போல, இன்று புதிய கல்விக் கொள்கை (NEP) வந்துள்ளதாகவும் கூறினார்.
News September 26, 2025
கண்களை ஏமாற்றும் புகைப்படங்கள்

‘கண்ணால் காண்பது பொய்’ என்பது போல சில புகைப்படங்கள் நம்மை ஏமாற்றிவிடும். இப்போது நாம் பார்க்கப்போகும் புகைப்படங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை உற்றுப்பாருங்கள். முதல்முறை பார்க்கும்போது ஒரு அர்த்தமும், நன்றாக கவனித்து பார்க்கும்போது ‘அட ஏமாந்துட்டோமே’ என தோன்ற வைக்கும். மேலே உள்ள படங்களை ஸ்வைப் செய்து பாருங்கள். இதுபோன்ற புகைப்படங்களை எடுப்பதற்கும் ஒரு திறமை வேணும் பாஸ்.
News September 26, 2025
ரஷ்ய துணை பிரதமருடன் PM மோடி சந்திப்பு

4-ம் ஆண்டு உலக உணவு இந்தியா சர்வதேச கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது ரஷ்ய துணை பிரதமர் Dmitry Patrushev – PM மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது விவசாயம், உரங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக மோடி X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.